கொழும்பு – திவுலப்பிட்டயில் பதற்றம் - மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் அதிரடிக் கைது!

#SriLanka #Colombo #Arrest #Police #Protest
PriyaRam
2 years ago
கொழும்பு – திவுலப்பிட்டயில் பதற்றம் - மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் அதிரடிக் கைது!

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - திவுலப்பிட்டி பிரதான வீதி ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. 

இதன்போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் தேரரொருவர் உட்பட 6 பேரைப் பொலிஸார் கைது செய்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

images/content-image/2023/10/1698819348.jpg

பேரணியின் ஆரம்பத்திலேயே, பேரணியை நடத்தக் கூடாது என பொலிஸார் அறிவித்திருந்தனர். 

எனினும் பொலிஸாரின் அறிவிப்பையும் மீறி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கலவரமாக நடந்து கொண்ட மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட குழுவினரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அதன்படி அவர்கள் தற்போது திவுலபிட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!