மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியானது அறிவிப்பு!
#SriLanka
#Electricity Bill
PriyaRam
2 years ago
மின் கட்டண திருத்தம் 2024 ஏப்ரலில் மேற்கொள்ளப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்த அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் மின் கட்டண திருத்தம் செய்யப்பட்டதால், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி மின் கட்டணம் திருத்தப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த மின்கட்டண திருத்தம் ஏப்ரல் 1ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.