மின் மற்றும் எரிபொருள் உயர்வு - பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

#SriLanka #School #Electricity Bill #Fuel #School Student
PriyaRam
2 years ago
மின் மற்றும் எரிபொருள் உயர்வு - பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10 வீதம் அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

எரிபொருள் விலையேற்றத்தினால் குறித்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு முடியாதுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதால் விலையை அதிகரிக்காமல் நிறுவனங்களை நடத்த முடியாதுள்ளதாகவும் உற்பத்தி நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

images/content-image/2023/10/1698811862.jpg

அரச பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி நடுப்பகுதியில் தொடங்க உள்ள நிலையில், பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு தயாராகுவர். 

குறித்த தேவையை பூர்த்திசெய்ய உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றன.

மேலும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் குறைந்த விலையில் பயிற்சிப் புத்தகங்களை அச்சிடுவதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!