இங்கிலாந்தில் இந்திய பெண் குத்திக்கொலை

இங்கிலாந்தின் தெற்கு லண்டனில் உள்ள குரோய்டனில் இந்தியாவை சேர்ந்த மேஹக் சர்மா என்ற பெண் வசித்து வந்தார். இந்த நிலையில் மேஹக் சர்மா உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷைலி ஷர்மர் (வயது23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அவர் குரோய்டனின் ஆல்ட்ரீவே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட மேஹக் சர்மா சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், அவருக்கு தெரிந்தவரா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. மேஹக் சர்மா மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.



