ஆசிரியர்களால் சீரழிக்கப்படும் சிறுமிகள், மாணவிகள். தண்டனையை கடும் தொனியில் நீதிபதி இளம்செழியன் வழங்கிய கூற்று.

#SriLanka #Student #Sexual Abuse #Lanka4 #இலங்கை #லங்கா4 #நீதிமன்றம் #Judge #Teacher
ஆசிரியர்களால் சீரழிக்கப்படும் சிறுமிகள், மாணவிகள்.  தண்டனையை கடும் தொனியில் நீதிபதி இளம்செழியன் வழங்கிய கூற்று.

அதிபர்களே ஆசிரியர்களே !! 

18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை நாம் கவனமாக பார்க்க வேண்டும் உங்களை நம்பித் தானே தங்களது பிள்ளைகளை பாடாலைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் தங்கள் கடமைகளை விட்டிலே புரிகிறார்கள். 

 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கிறாள் ஒழுக்கத்துடன் வளர்கிறாள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் வாழ்கின்றனர் . நம்பிக்கையை கெடுத்தார் போல் ஆசிரியர்கள் நீங்களே அவர்களின் நம்பிக்கையை கெடுப்பது போல நடந்தால் பெற்றோர்களுக்கு மிகுந்த வேதனை தராதா ? அவர்கள் யாரிடம் போவார்கள் 

 அதே வேளை உங்கள் மகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாள் என்ற செய்தி பாடசாலை நிர்வாகத்திலிருந்து பெற்றோர்களுக்கு செல்லும் போது அவர்கள் எப்படி துடி துடிப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா ? ஆசிரியர் சேவை என்பது எவ்வளவு புனிதமான தொழில் அவற்றை களங்கப்படுத்தும் விதமாக செயல்படுவது ஞாயமா ?

 ஆசிரியர்களே அதிபர்களே யாரேனும் தவறு செய்ய முயற்சிக்க வேண்டாம். சட்டம் கடுமையாக உள்ளது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் சிறுமியின் வாக்குமூலம் பெற்று உடனே காவல்துறைக்கு அறிவித்து பின் குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை கடுமையாக வழங்கப்படும் 

images/content-image/1698766192.jpg

 ஆசிரியர்களே உங்களை பற்றி நமக்கு கவலை இல்லை பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலமும் சட்டமூலம் கொடுக்கும் தண்டனை தான் எமக்கு முக்கியம் உங்களை வேலையை விட்டு தூக்குவதோ இடம் மாற்றுவதற்கோ நாம் இடமளிக்க மாட்டோம். காரணம் எங்குபோனாலும் அதைதான் செய்யப்போகிறீர்கள் அதனால் நிதானத்துடன் செயல்படுங்கள் .கண்ணியத்தை பேணுங்கள் அதுவே உங்களின் பாதைக்கு சிறந்த வழியாகும் 

 கடுமையான தண்டனை மூலமாக தான் சமூகத்தை நாம் வெகுவிரைவில் திருத்த முடியும் சட்டம் என்பது விளையாட்டு கூடம் அல்ல . பாடசாலையும் களியாட்ட விடுதியுமல்ல. மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் ஞானபீடமாகவே நான் கருதுகிறேன்

 மக்களுக்கும் ஓர் அறிவித்தல் .....நீங்களும் மிக மிக அவதானமாக அனைவரையும் உற்று நோக்குக்குவது உங்களின் தலையாய கடமையாகும் .ஆசிரியர்மார்களிடமும் அதிபரிடமும் மனம் விட்டு உரையாடுங்கள். பிள்ளைகள் கல்வி கற்கும் முறைகளை நன்கே அவதானியுங்கள். தவறுகள் ஏதும் தென்படின் உரிமையுடன் உங்கள் பிள்ளைகளுடன் உரையாடி தவறு புரிந்தவர்களை சட்டத்திடம் அழைத்து செல்லுங்கள் மனதில் ஐயம் வேண்டாம் நம் பிள்ளைகள் எதிர்காலம் நமது கைகளிலே.

 எதிர்கால சந்ததியை சீர்படுத்தும் செயலில் நாமும் நீதிபதியுடன் கரம் கோர்த்து செயல்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்....

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!