சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால் திறைசேரிக்கு கூடுதல் பணம் கண்டுப்பிடிக்க வேண்டும் - பந்துல குணவர்த்தன!
தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை உயர்த்துவதற்கு போதிய வருமானம் கிடைக்க வேண்டுமானால் திறைசேரிக்கு கூடுதல் பணம் கண்டுபிடிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுச் சொத்துக்களை விற்பது, வரிகளை மேலும் அதிகரிப்பது, புதிய வரிகளை விதிப்பது போன்றவையே கண்டுபிடிப்பதற்கான வழிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (31.10) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஏதாவது ஒரு வகையில் சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டு திறைசேரிக்கு கிடைத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும் என்றும் இதில் 2022ஆம் ஆண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக மாத்திரம் 956 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியத்திற்காக 309 பில்லியனும், செழிப்பு உள்ளிட்ட மானியங்களுக்காக 506 பில்லியனும் செலவிடப்பட்டதாகவும், இதன்படி, அரச வரி வருமானத்தில் இருந்து இந்த செலவுகளை மட்டுமே செலுத்த முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வரலாறு நெடுகிலும் இந்த நிலைமையை கடன் வாங்கி அச்சடித்து தீர்த்து வைத்துள்ளதாக தெரிவித்த அவர், நாடு முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ள மற்றும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள சுமார் 30 பாலங்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் பல பாழடைந்த நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த வருமானம் அதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கை அரசு இன்னும் பயன்படுத்தவில்லை. 2,000 பில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்ட முடிந்தது. அப்படியானால் சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு எங்கிருந்து பணம் வரும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.