நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழப்பு
#Death
#world_news
#Tamilnews
#Breakingnews
#Boat
#River
Mani
1 year ago

நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தில் ஆற்றில் இருந்து மயோ ரனேவா கிராமத்துக்கு படகு ஒன்று சென்றது. இதில் குழந்தைகள் மற்றும் வணிகர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்தனர். ஆட்கள் அதிகமாக இருந்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்தது.இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்தனர். மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டன.
இந்த விபத்தில் 18 பேர் பலியானார்கள். 14 பேரை மீட்டனர். 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆற்றில் மீட்புக் குழுக்கள் இன்னும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் 104 பேர் பயணம் செய்துள்ளனர்.



