தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம்: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு
#SriLanka
#Murder
#Court Order
#Bussinessman
Mayoorikka
2 years ago
தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை புதன்கிழமை (01) அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளின் பின்னர் உரிய சாட்சியங்களின் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை நடாத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (31) சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி தினேஷ் ஷாப்டரின் சந்தேகத்திற்குரி மரணத்திற்கான காரணம் நாளை (01) அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.