சம்பந்தனை சந்தித்த ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் !
#SriLanka
#R. Sampanthan
#M. A. Sumanthiran
Mayoorikka
2 years ago
ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இன்று(31.10.2023) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
