வடக்கில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!

#SriLanka #NorthernProvince #Governor #education
Mayoorikka
2 years ago
வடக்கில் பாடசாலை  மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!

வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும், தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

 அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வருகிறது. இளம் வயதினர் கல்வியில் சிறந்து விளங்கினால் தான் நாடு முன்னோக்கி செல்லும் என கூறியுள்ளார்.

 வடமாகாணத்தை பொறுத்தவரையில் கல்வியில் பின்னோக்கி செல்வது வேதனையான விடயமாகும் என்பதோடு வடக்கில் தற்போது பாடசாலையில் இருந்து இடை விலகும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து செல்லும் நிலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 அதேவேளை சுயமாக வாசிக்கும், எழுதும் திறன் ஆரம்ப பிரிவு மாணவர்கள் மத்தியில் குறைவடைந்து செல்கின்றமை ஆபத்தான விடயமாகும். 

images/content-image/2023/10/1698744805.jpg

 எனவே ஆரம்ப பிரிவு மாணவர்களின் சுயமாக வாசிக்கும் எழுதும் திறனை வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!