அஸ்வசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அஸ்வசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டம்!

அஸ்வசும நலன்புரி திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அஸ்வசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.  

அதன்படி, நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நிவாரணப் பயனாளிகளாக தகுதி பெற்ற குடும்பங்கள், இதுவரையில் பலன்களைப் பெறாத குடும்பங்கள், தொழில்நுட்பக் கோளாறால் உதவித்தொகை தாமதம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  

மேலும், நிவாரணப் பயனாளிகளுக்கான ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் நாளை (01.11) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், "தற்போது, ​​ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை நாங்கள் செய்துள்ளோம். அடுத்ததாக, நிதியமைச்சு மற்றும் திறைசேரி மூலம் 8.5 பில்லியன் ரூபாவை 1,365,000 பயனாளிகளுக்கு வழங்குவார்கள் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!