சீதா யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது!
'சீதா' யானையின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று உலோகத் துண்டுகள் அதன் மார்புப் துவாரத்தில், இதயம் மற்றும் நுரையீரலுக்கு அருகில் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார்.
நிலைமை மோசமடைந்து வருவதாகவும் யானையின் உடல்நிலை திருப்திகரமாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் யானையின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.. ரத்த அறிக்கை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அறிக்கை கிடைத்தவுடன், நிலைமை குறித்து மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து, மீதமுள்ள உலோகத் துண்டுகளை வெளியே எடுக்க வேண்டும்.
யானையின் இதயத்திற்கு அருகில் உள்ள மூன்று உலோகத் துண்டுகள் அடைக்கப்பட்ட பகுதி வீங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் யானை 'சீதா' காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.