இது போருக்கான நேரம் - பெஞ்சமின் நெதன்யாகு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

காசா பகுதியில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
டெல் அவிவில், போர்நிறுத்தத்தை அறிவிப்பது ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பைபிளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பிரதமர் இது போருக்கான நேரம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில், ஐ.நா உதவி நிறுவனங்கள் மீண்டும் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



