தென் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு வகையான வைரஸ்கள்! மனிதர்களுக்கு அபாயம்

தெற்கு சீனாவில் அமைந்துள்ள ஹைனானில் எட்டு வகையான வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி , இந்த ஆய்வை சீன வைத்திய அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் இனங்கள் பெருகினால் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது, "ஹைனானில் வசிக்கும் கொறித்துண்ணி பூச்சிகளிடமிருந்து 700க்கும் மேற்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் 8 வைரஸ்களைக் கண்டறிந்தோம்.
வைரஸ்களில் ஒன்று, கொரோனா வைரஸின் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்கள் கொறித்துண்ணி பூச்சிகளில் காணப்பட்டன, இந்த வைரஸ் எப்போதாவது பரவத்தொடங்கினால் மனிதர்களை அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில், ஒன்று கோவிஎச்.எம்.யு-1 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.



