ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ள உலக வங்கியின் முக்கிய அதிகாரி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் Anna Bjerde ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (31) இடம்பெறவுள்ளது.
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் Anna Bjerde தலைமையிலான குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் (29) நாட்டை வந்தடைந்தது.
குறித்த குழுவினர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரை சந்தித்துள்ளனர்.
அத்துடன், உலக வங்கியின் நிதி உதவியுடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை பார்வையிட்டுள்ளனர்.
மேலும், குறித்த குழுவினர் நேற்றைய தினம் (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதனிடையே, உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு பல்வேறு நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.