ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்கள் இந்தியாவில் தரையிறங்கின!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மோசமான வானிலை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.
ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு செல்லும் யுஎல் 365 விமானமும், மாலத்தீவில் இருந்து இலங்கை வரும் யுஎல் 116 விமானமும் இந்தியாவில் தரையிறங்கியுள்ளன.
மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களில் தரையிறங்க முடியாத நிலையில் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.