நயாகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் கைது!
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நயாகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் பிரசாத் ரணசிங்க வீரக்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் இன்று (30.10) மாலை கைது செய்யப்பட்டதாக களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை சந்தேகத்திற்குரிய முன்னாள் தலைவர் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை கொரியாவில் வேலைக்கு அனுப்பியதாகவும், பல்வேறு காரணங்களுக்காக இரண்டு முறை பணம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் குழு நேற்று (29) பலபிட்டிய நகரில் சந்தேகத்திற்குரிய தலைவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.