பொல்கொட ஆற்றில் சடலம் ஒன்று மீட்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொட ஆற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (27.10) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் இறந்தவரை உறுதி செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
உயிரிழந்த நபர் சுமார் 5 அடி உயரம், மெல்லிய உடல், குட்டையான முடி, முழங்கைக்கு அருகில் வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அவர் கருப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் பழுப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.