கடத்தபட்டவர்களை விடுவிக்க கோரி பிரான்சில் நூதன ஆர்ப்பாட்டம்
#Arrest
#France
#Protest
#children
#release
#Hamas
#Hostages
Prasu
2 years ago
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க கோரி Champ-de-Mars பகுதியில் நூதன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
குழந்தைகளை வைத்து இழுத்துச் செல்லும் தள்ளு வண்டிகளை (POUSSETTE) Champ-de-Mars இன் புல்வெளி பகுதியில் வைத்து இந்த நூதன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குழந்தைகள் கடத்தப்பட்டதால் அவர்களின் தள்ளு வண்டிகள் மட்டுமே எங்களிடம் மீதமிருப்பதாகவும் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 30 வரையான இழு பெட்டிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
“poussette vide” என தெரிவிக்கப்படும் இந்த அடையாள ஆர்ப்பாட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.