ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்பு- நால்வர் பலி

#Death #Police #Afghanistan #Hospital #BombBlast #Rescue #Terrorists
Prasu
2 years ago
ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்பு- நால்வர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷியைட் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 7 பேர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

காபூல் காவல்துறையின் தலைமை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரன், "காயமடைந்தவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும், குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும்" கூறினார்.

குண்டு வெடிப்பு சம்பவத்தின் வீடியோ வெளியானது. அதில், ஒரு கட்டிடத்தின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறுவதையும், உள்ளே தீப்பிழம்புகள் எரிவகையும் காட்டியது. 

சாலை முழுவதும் உடைந்த கண்ணாடி மற்றும் பிற குப்பைகள் சிதறிக்கிடப்பதை காண்பித்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!