மங்கோலியாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலி

#India #Death #Accident #2023 #Tamilnews #Breakingnews #Died
Mani
2 years ago
மங்கோலியாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலி

மங்கோலியா தலைநகர் உலன் பாடோரின் சோங்கினோகைர்கான் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தது, தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

கட்டுங்கடங்காமல் பற்றி எரிந்த தீயை அணைக்க வீரர்கள் போராடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அவர்கள் அணைத்தனர். இருப்பினும் தீயில் அந்த வீடு முழுவதுமாக எரிந்தது. இந்த பயங்கர விபத்தில் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குளிர் காலத்தின் காரணமாக, பெரும்பாலான வீடுகளில் அறையை சூடாக்க தீ மூட்டம் போட்டு வருகிறார்கள். அவ்வாறு தீ மூட்டம்போடும் முயற்சி விபரீதமாக மாறியதாக போலீசார் விசாரணையில் தெரிந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!