அம்பிட்டியசுமரண தேரர் விவகாரம்:பொலிஸ் மா அதிபருக்கு சுமந்திரன் காரசார கடிதம்

#SriLanka #M. A. Sumanthiran
Mayoorikka
2 years ago
அம்பிட்டியசுமரண தேரர் விவகாரம்:பொலிஸ் மா அதிபருக்கு சுமந்திரன் காரசார கடிதம்

அம்பிட்டியசுமரண தேரருக்கு எதிராக பொலிஸார் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்க்கவில்லை என கோரி பொலிஸ்மா அதிபருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

 மங்களராமய அம்பிட்டியசுமணதேரர் கடந்த சில நாட்களாக விடுத்துவரும் அறிக்கைகள் குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றேன் - இந்த அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

images/content-image/2023/10/1698399903.jpg

 எங்கள் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆர் ராசமாணிக்கத்தை தாக்கி தேரர் தொடர்ச்சியாக அறிக்கைவிடுத்துள்ளார். மேலும் அவர் நாட்டின் தென்பகுதியில் வசிக்கும் தமிழ்மக்களை வெளிப்படையாக அச்சுறுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்,அவர்களை துண்டுதுண்டாக வெட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.

 இது ஐசிசிபிஆர்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய அப்பட்டமான குற்றமாகும். 

 பொலிஸார் ஏன் பௌத்தமதகுருவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என சுமந்திரன் கேள்விஎழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!