இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள்: ஹமாஸ் தெரிவிப்பு
#Death
#world_news
#Israel
#War
#Hamas
Mayoorikka
1 year ago

காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 222 இஸ்ரேலியர்களில் 55 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேலிய விமானப்படையின் இடைவிடாத வான்வழித் தாக்குதல்களால் 55 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் கூறியது.
கடந்த 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலை பணயக்கைதிகளாக பிடித்தனர்.
பணயக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்குவர்.



