அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட இறுதி வரைவு!
தேசிய விவசாயக் கொள்கையின் இறுதி வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய விவசாயக் கொள்கைக்கான முன்மொழிவுகளை முன்வைப்பதற்காக தேசிய மாற்றுக் கொள்கை நிலையத்தின் பிரதிநிதிகள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் .மகிந்த அமரவீரவைச் சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கங்கள் மாறினாலும் அமைச்சர் மாறினாலும் மாறாத தேசிய விவசாயக் கொள்கை நாட்டுக்கு தேவைப்படுவதால் விவசாயக் கொள்கை விரைவாக வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய விவசாயக் கொள்கையின் இறுதி வரைவு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய மாற்றுக் கொள்கை மையத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை இணைப்பாக இணைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் தேசிய மாற்றுக் கொள்கை மையத்திற்கு தெரிவித்தார்.