கொழும்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து - கட்டுப்படுத்தப் போராடும் தீயணைப்பு படை! (இரண்டாம் இணைப்பு)

#SriLanka #Colombo #Accident #fire #Injury
PriyaRam
2 years ago
கொழும்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து -  கட்டுப்படுத்தப் போராடும் தீயணைப்பு படை! (இரண்டாம் இணைப்பு)

கொழும்பு – புறக்கோட்டை  2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீப்பரவலில் சிக்குண்டு 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

images/content-image/2023/10/1698386850.jpg

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(இரண்டாம் இணைப் பு) 

 கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் பரவிய தீயில் சிக்கி காயமடைந்த 21 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் வெள்ளிக்கிழமை என்பதன் காரணமாக, காலையில் ஊழியர்கள் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் தீப்பற்றியிருக்கலாம் என அருகிலுள்ளவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

 உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமையே முழு கட்டிடத்திற்கும் தீ பரவியமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/2023/10/1698386871.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!