யாழில் முன்னெடுக்கப்பட்ட தீப் பந்தப் போராட்டம்!
#SriLanka
#Jaffna
#Protest
PriyaRam
2 years ago
மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த போராட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நேற்று இரவு இப்போராட்டம் நடைபெற்றது.
யாழ் நல்லூர் பகுதியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பந்த ஊர்வல பேரணி இளங்கதிர் சனசமூக நிலையம் வரை சென்று நிறைவுபெற்றது.

இப்போராட்டத்தில் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இப்போராட்டத்தின் தொடராக யாழிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

