மனித கடத்தல் வழக்கில் தொடர்புடைய இலங்கை பிரஜை இந்தியாவில் கைது!
இலங்கைப் பிரஜைகள் தொடர்பான மனித கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 39 வயதுடைய நபரை இந்திய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
ஹாஜா நஜர்பீடன் என்ற முகமது இம்ரான் கான் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் வசிக்கும் கான், இப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஒரு பிரபலமான கடத்தல்காரர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
"அவர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பல சட்ட அமலாக்க நிறுவனங்களால் தேடப்படும் தப்பியோடியவர்" என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.
குறித்த இதுவரை 38 இலங்கை பிரஜைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியிருப்பதாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.