மாடுகளை திருடுவோருக்கு மில்லியன் கணக்கில் அபராதம் விதிக்க தீர்மானம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மாடு திருடினால் விதிக்கப்படும் அபராதத்தை ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராதம் 50,000 ரூபா எனவும், அது போதாது என்பதால் உரிய அபராதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வருடம் கடின உழைப்புடன் கூடிய சிறைத்தண்டனை விதிப்பது தொடர்பாக விலங்குகள் நலச் சட்டத்தில் உட்பிரிவுகளைச் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.