கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஐவர் உயிரிழப்பு!
#SriLanka
#Canada
#Lanka4
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கனடாவில் நேற்று (24.10) இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர்.
Sault Ste என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
03,07,12, மற்றும் 41 வயதுடைய நபர்கள் மேற்படி சம்பவத்தால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.