காசா மோதலில் மனிதாபிமான சட்டங்கள் தெளிவாக மீறப்பட்டுள்ளது - அன்டோனியோ குட்டரெஸ்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
காசா மோதலில் மனிதாபிமான சட்டங்கள் தெளிவாக மீறப்பட்டுள்ளது - அன்டோனியோ குட்டரெஸ்!

காசாவில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தெளிவாக மீறப்பட்டிருப்பது குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.  

குடிமக்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்துவதையும், வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகு தெற்கு காசா மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதையும் அவர் கண்டித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் "வெற்றிடத்தில் நடக்கவில்லை" என்று குட்டெரெஸ் கூறிய நிலையில், அதற்கு இஸ்ரேலிய தூதர் ஐ.நா பொதுச்செயலாளரிடம் பதவியை இராஜினாமா செய்யுமாறு பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. 

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இடம்பெற்ற மோதல்களில் இரு தரப்பிலும் 7,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!