மெக்சிகோவில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் 24 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மெக்ஸிகோவில் கடந்த திங்கட்கிழமை (23.10) தனித்தனியாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போதைப் பொருள் பாவனை அதிகளவு இடம்பெறும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் மேற்படி உயிரிழப்புகள் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மெக்சிகோ நகரத்திலிருந்து 75 மைல் தொலைவில் உள்ள சான் மிகுவல் கனோவா கிராமப்புற சமூகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.