ஹமாஸ் அமைப்பு குறித்து ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

#America #world_news #government #Israel #War #Tamilnews #Hamas
Prasu
1 year ago
ஹமாஸ் அமைப்பு குறித்து ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரிக்க, பாலஸ்தீனத்தை ஈரான், கத்தார், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் ஆதரிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திட்ட தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசுகையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவளித்து வருகிறது. இரு தசாப்தங்களாக இந்த ஆதரவு உள்ளது. ஈரான் இன்றி ஹமாஸ் அமைப்பினரால் இயங்கவோ அல்லது தொடர்ந்து செயல்படவோ முடியாது.

 உலகில் கெட்ட நபர்களுடன் சேர்ந்து கெட்ட விஷயங்களை ஈரான் செய்து வருகிறது என்ற உண்மையில் இருந்து, ஒருவரும் விலகிச் சென்று விட முடியாது. அதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!