ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள் : அனுர குமார திஸாநாயக்க வேண்டுகோள்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #AnuraKumaraDissanayake
Thamilini
2 years ago
ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள் : அனுர குமார திஸாநாயக்க வேண்டுகோள்!

அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர்  அனுர குமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

தேசிய மக்கள் சக்தியினால் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், எடுத்த முடிவு தவறாக இருந்தாலும் வருந்தக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். 

 எழுபத்தைந்து ஆண்டுகளாக தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால், மீண்டும் ஐந்தாண்டு சோதனைக்கான நேரம் வந்துவிட்டது எனக் கூறிய அவர்.    தற்போதுள்ள அமைப்பை மாற்றுவதற்கு நம்பக்கூடிய ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்திதான் எனவும் வலியுறுத்தினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!