இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளி்நாட்டு தூதுவர்கள்!
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் இன்று (24.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஈரானுக்கான புதிய தூதர்களே தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன், சுவிட்சர்லாந்தின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அதிவிசேட மற்றும் முழுமையான அதிகாரத் தூதுவராக டாக்டர் சிறி வால்ட்டை நியமித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் அதிவிசேடமான மற்றும் முழுமையான அதிகாரம் கொண்ட தூதுவராக எம். கார்மென் மோரேனோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஈரான் இஸ்லாமியக் குடியரசு இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடன் இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அசாதாரண மற்றும் முழுமையான அதிகாரத் தூதுவராக டாக்டர் அலிரேசா டெல்கோஷை நியமித்துள்ளது.