ஜேர்மன் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான பிரித்தானிய கப்பல் : பலர் மாயம்!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Germany
Thamilini
2 years ago
இரண்டு சரக்குக் கப்பல்கள் ஜேர்மன் கடற் பகுதியின் வடக்கு கடலில் மோதியதில் பலரைக் காணவில்லை என்று ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலேசி மற்றும் வெரிட்டி ஆகிய கப்பல்கள் இன்று (24.10) அதிகாலையில் ஹெல்கோலாண்ட் தீவின் தென்மேற்கே சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொடியுடன் பயணித்த குறித்த கப்பலில் 22 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது முடக்கிவிடப்பட்டுள்ளன.
தற்போதைய நிலைவரப்படி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.