கொங்கோ ஆற்றில் படகு விபத்து - பலர் பலி; தீவிர தேடுதல் நடவடிக்கை!
#Death
#Accident
#world_news
#Boat
PriyaRam
2 years ago
ஆபிரிக்காவின் கொங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 11பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் போது காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் வரை உயிரிழந்தனர்.

படகுகளில் கொண்டு செல்லப்படும் பொருட்களின் நிறை அதிகரித்து காணப்படுவதால் இவ்வாறான விபத்துக்கள் நிகழ்வதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.