கொழும்பில் துப்பாக்கிச்சூடு நடாத்தி கைது செய்யப்பட்ட நபர்கள்!
#SriLanka
#Colombo
#Arrest
#drugs
#GunShoot
Mayoorikka
2 years ago
கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக சொகுசு வாகனத்தில் இருவர் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சொகுசு வாகனம் அந்த இடத்தில் உள்ளது.