பிரேசில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
#Death
#School
#Police
#Student
#Hospital
#Brazil
#GunShoot
#Rescue
Prasu
2 years ago
பிரேசிலின் மிகப்பெரிய நகரமான சாவ் பாலோவில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாவ் பாலோவின் கிழக்குப் பகுதியில் உள்ள சபோபெம்பாவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.