உலகின் வயதான நாய் 31ஆவது வயதில் மரணம்

#Death #America #WorldRecord #Old #Dog #Animal
Prasu
2 years ago
உலகின் வயதான நாய் 31ஆவது வயதில்  மரணம்

உலகின் வயதான நாய் 31ஆவது வயதில் காலமானது. அதன் பெயர் பாபி. போர்ச்சுகலின் லெய்ரியாவைச் சேர்ந்த பாபி, நீண்டகாலம் உலகில் வாழ்ந்த நாய் என சாதனைப்படைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான டாக்டர் கேரென் பெக்கர், பாபி இறந்த செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலகில் அதிகமானோர் பாபியை நேசித்ததாக அவர் கூறியுள்ளார்.

பாபியை விரும்பியவர்களுக்காக பாபி வாழ்ந்த காலம் போதாது என்றும் அவர் தமது கவலையை வெளிப்பத்தியுள்ளார். பாபி மொத்தம் 11,478 நாள்கள் பூமியில் வாழ்ந்துள்ளது. 

நாய்கள் சராசரியாக 14 ஆண்டுகள் உயிர் வாழக் கூடியவை. கடந்த பிப்ரவரியில் பாபிக்கு அதிக காலம் உயிர் வாழ்ந்த நாய் என்று கின்னஸ் சாதனை விருது அளிக்கப்பட்டது.

 அந்த சமயத்தில் பாபிக்கு வயது 30 ஆண்டுகள், 266 நாள்கள். சென்ற மே 11ஆம் திகதி 31வது வயதை அடைந்தபோது பாபியின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!