எம்மைக் கேட்காது அமைச்சரவையை மாற்றும் துணிவு ரணிலுக்கு வந்து விட்டதா? ஜோன்ஸ்டன் ஆவேசம்!
#SriLanka
#Ranil wickremesinghe
#srilankan politics
PriyaRam
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி திரும்பப் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார் என்றும் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.