சர்வதேச நாடுகளில் இருந்து இலங்கைக்கு விசா இன்றி பயணிக்கலாம்!
#SriLanka
#Airport
#Visa
Mayoorikka
2 years ago
7 நாடுகளிலிருந்து பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கக்கூடிய முன்னோடி வேலைத்திட்டமொன்றை அமைச்சரவை அனுமதித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறையிலிருக்குமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டு பயணிகள் விசா இன்றி பயணிக்க அமைச்ரவை அங்கீகரித்துள்ளதெனவும் இந்நடைமுறை உடனடியாக அமுல் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.