மனைவியைப் படுகொலை செய்து கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை!
#SriLanka
#Police
#Murder
#Investigation
PriyaRam
2 years ago
பூகொட மண்டாவல பிரதேசத்தில் மனைவியைக் கொன்ற நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளின் போது சந்தேகநபரின் சடலம் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் மண்டாவல பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 54 வயதுடைய மனைவி மற்றும் கணவன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.