நாடளாவிய ரீதியில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

#SriLanka #people #Health Department
PriyaRam
2 years ago
நாடளாவிய ரீதியில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று நோய்கள் பரவும் தன்மை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் நிலைமை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.

கண் நோய் வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் வேகமாக பரவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1698122136.jpg

இந்த நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த சுய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் குறிப்பாக அதிக மழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நோய் நிலை தீவிரமாகக் கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!