கட்டாரில் இருந்து வருகைதந்த இலங்கை பெண் விமானத்தில் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வீட்டு வேலைக்காக கட்டாருக்குச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் மீண்டும் நாடு திரும்பும் போது விமானத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரியங்கா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று (23.10) அதிகாலை 1.17 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் தோஹாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இதன்போதே குறித்த மரணம் ஏற்பட்டுள்ளது.