சடுதியாக உயர்ந்த மின் கட்டணம் - தீப்பந்தப் போராட்டத்தில் மக்கள்!
#SriLanka
#Protest
#Electricity Bill
PriyaRam
2 years ago
மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாட்டின் பல பிரதேசங்களில் நேற்றிரவு தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஹைலெவல் வீதியின் பன்னிப்பிட்டிய அரச மரத்திற்கு அருகாமையில் நேற்றிரவு தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக மஹரகம முதல் பன்னிப்பிட்டிய வரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதேவேளை, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு கட்டுகஸ்தொட்டை பகுதியிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.