கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இரு தமிழர்களை அந்த பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பயங்கரவாதத்தை ஆதரித்ததற்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அந்த பட்டியலில் நீக்க பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (23.10) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ரமேஷ் என்ற அந்தோணி எமில் லட்சுமி கந்தன் என்ற நபரை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரும் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், முருகேசு ஸ்ரீ சண்முகராஜா என்பவரையும்கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் இருவரும் பயங்கரவாதத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.