இலங்கைக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல்: நடுக்கடலில் தீவிர விசாரணை!
#India
#SriLanka
#Ship
Mayoorikka
2 years ago
தமிழகத்தின் - ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை கடத்தி செல்வதாக இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து கடல் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமாக நான்கு இலங்கை படகும் அதில் இருந்த 8 பேரையும், அதேபோன்று மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்த நான்கு பேரையும் மடக்கி பிடித்து நடுக்கடலில் வைத்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் எட்டுப் போரையும் இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

