இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#prices
#Food
#inflation
#money
Mayoorikka
2 years ago
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று(23) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 2.1 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேநேரம், உணவு பணவீக்கமானது கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மறை 5.4 சதவீமாக காணப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் மறை 5.2 சதவீமாக அதிகரித்துள்ளது.
அத்துடன், உணவல்லாப் பணவீக்கம் கடந்த ஒகஸ்ட் மாதம் 9 சதவீதமாக காணப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.