தொழில் முயற்சியாளர்களுக்காக மாவட்ட செயலகத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதி!

#SriLanka #Kilinochchi #government
Mayoorikka
2 years ago
தொழில் முயற்சியாளர்களுக்காக மாவட்ட செயலகத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதி!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்காக திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாவட்ட செயலகத்தில் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

 தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாது இருந்த நிலையில், மாவட்ட அரசாங்க அதிபரின் இந்த அறிவிப்பு உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அந்தவகையில், சுய தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த முடியும்.

images/content-image/2023/10/1698045648.jpg

 இறக்குமதி உற்பத்திகள் மற்றும் பெருந் தொழிற்சாலை உற்பத்தி பொருட்களால் சந்தையில் உள்ளூர் உற்பத்திகளிற்கான சந்தை வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

 இந்த நிலையில், இவ்வாறான சந்தை வாய்ப்புக்களை வழங்குவதுடன், சனி, ஞாயிறு தினங்களில் விசேட சந்தை வாய்ப்பினை வழங்கி தம்மை ஊக்கப்படுத்துமாறு சுயதொழில் முயற்சியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!