தென்கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
#Death
#world_news
#SouthKorea
#Breakingnews
Mani
2 years ago
தென் கொரியாவின் தலைநகரான சியோலுக்கு தெற்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அங்குள்ள புவான் பகுதிக்கு விசைப்படகு வந்தபோது, மற்றொரு விசைப்படகு அதன் மீது மோதியதில், மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், நான்கு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர், மேலும் பதினான்கு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தற்போது, விபத்துக்கான காரணத்தை கண்டறிய கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.